கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன்குளம் 50 வீட்டுத்திட்டம் பகுதியில் சினைப்பர் (தொலை தூர சுடுகலன்) துப்பாக்கி ஒன்றின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் குறித்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து அங்கு காணப்படுகின்ற பொதுக் கிணறு ஒன்றினை இன்று மாலை சீரமைத்துள்ளனர்.
எனினும் இதன்போது சினைப்பரின் பாகங்கள் காணப்பட்டிருக்கின்றன.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் அக்கராயன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த துப்பாக்கி தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.


