மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், சிலர் சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள சமூக ஆர்வலர்கள், சில மதகுருக்களும் அலட்சியப்போக்குடன் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக ஆலயங்கள், கோவில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் அதிகளவான மக்களை அழைப்பதும் முகக்கவசங்களை அணியாது மதவழிபாடுகளில் ஈடுபடும் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
மேலும் தொடர்சியாக சுகாதார நடைமுறைகளை மீறி செயற்படுகின்ற குற்ற உணர்வு சிறிதும் இன்றி அவ்வாறான நிகழ்வுகளை சமூக வலைதலங்களில் நேரலை செய்து பதிவுகள் இடுவதும் அதிகரித்துள்ளது.
அதே நேரம் சில கிராம பகுதிகளில் தொடர்சியாக கொரோனா நெருக்கடி நிலைமையிலும் சுகாதார நடைமுறைகளை மீறி கோவில் திருவிழாக்கள் இடம் பெறுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே பொது மக்களோ மத குருக்களோ சுகாதார நடைமுறைகளை மீறும் பட்சத்தில் குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக பொலிஸாருக்கோ,சுகாதார தரப்பினருக்கோ தெரியப்படுத்துமாறு புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரம் பொலிஸாருக்கோ சுகாதார துறையினருக்கோ தெரியாமல் இரகசியமாக ஒன்று கூடுவதையோ விழாக்கள் முன்னெடுப்பதை தவிர்க்குமாறு சுகாதார துறையினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


