வைரஸ் தொற்றுக்கான சாதாரண அறிகுறிகள் தென்படும்போது அவற்றை உதாசீனப்படுத்த வேண்டாமென வைத்திய சேவைகள் தொடர்பான பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் லால் பனாப்பிட்டி மக்களை வலியுறுத்தியுள்ளார்.
நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.