பண்டாரவளை, கஹத்தேவெல பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த 62 வயதான நபரொருவர், தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் பதுளை பொது வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், மூன்று நாள்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார்.
இதேவேளை, பண்டாரவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் புதிய கொரோனா தொற்றாளர்கள் 59 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அதில், 37 பேர் உடனடி அன்டிஜன் பரிசோதனையில் இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்களில், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 2 வயதுக்கும் குறைவான குழந்தைகளை வைத்தியசாலையில் அனுமதித்து ஏனையவர்களை வீட்டினுள் தடுத்து வைத்து சிகிச்சை அளிக்க பண்டாரவளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


