புத்துவெட்டுவானின் உள்ள அஞ்சல் அலுவலகத்தை ஐயன்கன்குளம் பகுதிக்கு இடம்மாற்ற வேண்டாம் எனவும் அவ்வாறான நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் மீறி குறித்த நடவடிக்கையை மேற்கொண்டால் தாம் எதிர்த்து போராடுவோம் எனவும் புத்துவெட்டுவான் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட புத்துவெட்டுவான் கிராமத்திற்கு சொந்தமான அஞ்சல் அலுவலகம் இன்று வரை பாழடைந்த நிலையில் காணப்படுவதாகவும் அதனை புதுப்பித்து தருமாறும் இதனை விடுத்து புத்துவெட்டுவானின் உள்ள அஞ்சல் அலுவலகத்தை ஐயன்கன்குளம் பகுதிக்கு இடம்மாற்ற வேண்டாம் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
புத்துவெட்டுவான் கிராமத்தில் உள்ள உபஅஞ்சல் அலுவலகம் நிலையான கட்டித்தில் இயங்க முடியாத நிலையில் பிறிதொரு கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கும் உப அஞ்சல் அலுவகத்தினை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
கிராமத்திற்கான உப அஞ்சல் அலுவலகம் போரிற்கு முன்னரான காலத்தில் இருந்து புத்துவெட்டுவானின் இயங்கி வந்த நிலையில் அவர்களது கிராம வீதியின் பெயரே தபாலக வீதி என காணப்படுகிறது
ஆனால் யுத்த சூழல் காரணமாக தபாலகத்திற்கான காணி கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் தற்போது கிராமத்திற்கான தபாலகம் மருத்துவ தாதிகளின் விடுதியில் ஒரு சிறிய அறையில் இயங்கிவருகின்றது.
கிராமத்தில் உள்ள மக்கள் மின்சார கட்டணம் கட்டுவது,முதியவர் கொடுப்பனவு எடுப்பது,சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு எடுப்பது போன்ற செயற்பாடுகளை இந்த தபாலகத்தின் ஊடாகவே மேற்கொண்டு வருகின்றார்கள்
.
இதனை விட ஏனைய அரச சேவையினை பெற்றுக்கொவதற்காக 20 கிலோமீற்றர் தூரம் செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது. வசதிகள் இல்லாத நிலையில் இந்த கிராமத்தில் இருந்து பல குடும்பங்கள் வேறு இடங்களுக்கு சென்றுள்ளார்கள் இன்னிலையில் தபாலகத்தினை மாற்றுவதை நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
12 ஆண்டுகளாக தற்காலிகமாக இயங்கும் தபாலத்திற்கு அதற்கான காணி இருந்தும் கட்டிடம் இருந்தும் பாழடைந்த நிலையில் இருக்கின்றது இதனை புதுப்பித்து இந்த பகுதியிலேயே தபாலகத்தை இயங்க தபால் மா அதிபரிடம் ஊடகங்கள் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்கள்
இருக்கின்ற ஒரேயொரு அரச நிறுவனமான இந்த அரசசேவையினையும் இடம் மாற்றுவதாக இருந்தால் கிராமத்தில் உள்ள மக்களினையும் வேறு இடத்திற்கு மாற்றுமாறும் கோரிக்கைவிடுத்துள்ளார்கள்.





