கொரோனா தொற்றால் பெண் ஒருவர் மரணம்…!

நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து செல்லும் வேளைகளில் கொரோனா மரணமும் உச்சம் தொட்டுக்கொண்டே வருகின்றது.

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று நோயால் இன்று (19) மரணமடைந்துள்ளார்.

மேலும் குறித்த பெண்ணுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் இதனையடுத்து அவர் பம்பைமடுவில் அமைந்துள்ள கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்துள்ளார்.

Leave a Reply