ஊவா மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுனர்களுக்கான ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, ஊவா மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அதனடிப்படையில் 2021.08.16 ஆம் திகதி முதல் 2021.09.15 வரையில் இவ்வாறு குறித்த சேவை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த காலப்பகுதியில் காலவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு எவ்வித அபராதமும் வசூலிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.


