அளம்பில் வடக்கில் காடழிப்பினை காப்பாற்றுமாறு கோரிக்கை

அளம்பில் வடக்கில் காடழிப்பினை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், காடழிப்புக்கு எதிராக வீதியில் வாசகங்களும் எழுதப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட அளம்பில் வடக்கு பகுதியில் காடழிப்பு இடம்பெற்று வருவதாகவும் இதனை காப்பாறுமாறும் முல்லைத்தீவு-மாங்குளம் வீதியில் வாசங்கள் எழுதப்பட்டுள்ளன.

அதன்படி, வீதியில் மஞ்சல் வர்ணத்தில் எழுதப்பட்ட எழுத்துக்களாக, “இராணுவமே எமது அளம்பில் காட்டினை காப்பாற்று ,எமது காடுகளை விற்கும் கிராம அபிவிருத்திசங்கம்” இலஞ்சம் வாங்கி அளம்பில் வடக்கு காடுகளை விற்கும் வனவளத்திணைக்களம் பிரதேச செயலாளரே எமது வளத்தினை காப்பாற்றுங்கள்,

இலஞ்சம் வாங்கும் அளம்பில் வடக்கு கிராம சேவையாளர்,அழிக்கப்படும் அளம்பில் வடக்கு காடுகள், ” போன்ற வசனங்கள் இனந்தெரியாத நபர்களால் எழுதப்பட்டுள்ளன.

Leave a Reply