கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்க நவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் 10 பேர் யோசனை முன்வைத்துள்ளனர்.
அவர்கள் தாம் கையெழுத்திட்ட கடிதமொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அத்துடன், கொரோனா தொடர்பான தரவுகளை திட்டமிட்டு சிதைக்கும் அதிகாரிகள் மீது தராதரம் பார்க்காது நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
குறித்த கடிதத்தில் 07 யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


