கொரோனா தொற்று காரணமாக யாழ். போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் (18) உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் அவருக்கு டெல்டா திரிபு வைரஸ் தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் யாழ். போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தொடர்ச்சியாக மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சையில் பலனின்றி நேற்று முன்தினம் காலை உயிரிழந்துள்ளார்.
கந்தேரோடையை சேர்ந்த குறித்த நபருக்கு ஆபத்தான டெல்டா வகை திரிபு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்ததாக சுகாதார பிரிவினரால் அவரது குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தெல்லிப்பழை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ஒருவர் கடந்த மாதம் உயிரிழந்த நிலையில் அவருக்கும் டெல்டா வகை திரிவு வைரஸ் தொற்று காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


