ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்று, நாட்டின் பொருளாதாரம் மற்றும் நாட்டை முடக்குவதில் உள்ள சிக்கல் நிலை என்பன தொடர்பில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம், ஜனாதிபதி நாளைய தினம் கண்டிக்கு சென்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மாநாயக்க தேரர்களை சந்தித்து, நாட்டின் நிலைமை குறித்து தெளிவுபடுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு , ஜனாதிபதி, நாட்டு மக்களுக்கு உரையாற்றும் தினம் மற்றும் நேரம் என்பன ஊடகங்கள் மூலமாக தெரியப்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.


