நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான ரி-20 தொடரில் விளையாடும் பங்களாதேஷ் அணி அறிவிப்பு!

நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான ரி-20 தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க பங்களாதேஷ் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

19பேர் கொண்ட அணியில் முன்னணி வீரர்களான முஷ்பிகுர் ரஹீம் மற்றும் லிடொன் தாஸ் ஆகியோர் மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அதேபோல சொந்த காரணங்களுக்காக விடுப்பில் சென்றிருந்த பந்துவீச்சு சகலதுறை வீரரான அமினுல் இஸ்லாம் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,

மொஹமதுல்லா தலைமையிலான அணியில், சகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், சௌமியா சர்கார், லிடொன் தாஸ், மொசடெக் ஹொசைன், அபீப் ஹொசைன், நய்ம் ஷெய்க், நுருல் ஹசன், சமீம் ஹொசைன், ரூபெல் ஹொசைன், முஷ்டபிசுர் ரஹ்மான், டஸ்கின் அஹமட், செய்ப்பூதின், சொரிபுல் இஸ்லாம், தைஜூல் இஸ்லாம், மெயிடி ஹசன், அமினுல் இஸ்லாம், நசும் அஹமட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் செல்லவுள்ளது.

இதன்படி இரு அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி டாக்காவில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *