யாழில் கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிப்பு

யாழ்ப்பாணம் – தொண்டமானாறு கடற்பரப்பில் ஒருதொகை கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தொகை கஞ்சா 168 கிலோ நிறையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செம்பியன்பற்று, சிலாவத்துறை பகுதிகளைச் சேர்ந்த 20,28,28 வயதுகளை உடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்கள் பயன்படுத்திய செம்பியன்பற்றைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த தொகை கஞ்சாவின் பெறுமதி சுமார் 34 மில்லியன் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Leave a Reply