வர்த்தக நிலையங்களை மூடுவதால் எவ்வித பயனும் கிடையாது- இராணுவத் தளபதி

வர்த்தக நிலையங்களை சுயமாக மூடுவதால் எவ்வித பயனும் கிடையாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போதைய சூழ்நிலைமை உணர்ந்து வர்த்தகர்கள், தங்களது வர்த்தக நிலையங்களை சுயமாக மூடியுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால் சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவது அவசியமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது,  வர்த்தக நிலையங்களை மூடியுள்ளமையினால் ஒருசில இடங்களில்,  நுகர்வோர் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வேறு பகுதிகளில் உள்ள நகரங்களுக்கு செல்கிறார்கள். ஆகவே வர்த்தக நிலையங்களை சுயமாக மூடுவதால் எவ்வித பயனும் கிடையாது என சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். புதிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டலில் அடிப்படையில் பொது மக்கள் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதாவது, வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் செல்ல முடியும். எனினும் தொழில் மற்றும் அத்தியாவசிய சேவைக்காக வெளியில் செல்லும் போது ஒருவர் என்ற அறிவுறுத்தல் தாக்கம் செலுத்தாது என சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *