வடமராட்சி கிழக்கு (மருதங்கேணி) பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் பகுதியளவில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
குறித்த பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் மோட்டார் போக்குவரத்து பிரிவு அலுவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனாலேயே மேற்குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகளும், பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்கள் வழங்கும் நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேற்குறித்த சேவைகள அருகிலுள்ள பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


