கொரோனா அச்சுறுத்தல்- மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஒரு நடவடிக்கையாக மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள்  இன்று (வெள்ளிக்கிழமை) மூடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு வர்த்தக சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே  வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நிலையங்களை மூடியுள்ளனர்.

அதாவது, அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள்  மூடப்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply