யாழில் எரிபொருள் நிரப்ப முண்டியடித்த கூட்டம்

யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் பெற்றுக் கொள்ளும் நிலை காணப்படுகின்றது.

அதன்படி, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரி ஒருவரால் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து இன்றைய தினம் எரிபொருளினை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து தமக்குரிய எரிபொருளை பெற்றுச் செல்வதை காணக்கூடியதாகவுள்ளது.

மேலும், பெற்றோலிய வள அமைச்சர் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை எனவும் அவ்வாறான ஒரு நிலை ஏற்படுமாயின் பொது மக்களுக்கு அறியத் தரப்படும் எனவும் தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

அத்துடன், இன்று வெள்ளிக்கிழமை இரவிலிருந்து எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அத்தியாவசியத் தேவை தந்தோர் பயணிக்க முடியாத வகையில் பொது முடக்கம் அமுல்படுத்தப்படவுள்ளது.

Leave a Reply