அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முண்டியடிக்கும் மக்கள்

நாடளாவிய ரீதியில் 10 நாட்கள் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அத்தியாவசப்பொருட்களை வாங்குவதற்கு முண்டியடிப்பதோடு எரிபொருள் நிவையங்களிலும் வழமைபோன்று மக்கள் திரண்டு காணப்படுகின்றனர்.

அதாவது மன்னார் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நகர பகுதி நோக்கி விரைந்துள்ளனர்

திடீர் என முடக்க நிலை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மரக்கரி சந்தைகள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் என்பன மக்கள் கூட்டத்தால் நிறைந்துள்ளது

மேலும் தொடர்சியாக நகர பகுதியில் மக்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் பொலிஸாரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையை அவதானிக்க கூடியதாக உள்ளது

இதேவேளை நாட்டில் ஊரடங்கு அல்லது பயணக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டால் யாழ்ப்பாணத்தின் எரிபொருள் நிலையங்கிளில் மக்கள் திரண்டு எரிபொருளினைப் பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பர்.

அதேபோல இன்று பிற்பகல் முடக்கம் குறித்த அறிவிப்பு வெளியான பின்னர் நூற்றுக்கணக்கான மக்கள் ஒவ்வொரு எரிபொருள் நிலையத்திலும் திரண்டிருப்பதை காணமுடிகிறது.

மேலும் இலங்கையில் எதிர்வரும் நாட்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளதாகநேற்றைய நாள் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்த கனியவள தேசிய சேவையாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்திருந்த போதிலும் இன்று நண்பகல் வரையில் எரிபொருள் நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply