இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும் குறித்த காலப்பகுதியில் அனைத்துவிதமான அத்தியாவசிய சேவைகளான மருந்து உற்பத்தி மற்றும் விநியோகம், விவசாயம், ஆடைக் கைத்தொழில் ஆகியவற்றை எவ்வித இடையூறுமின்றி முன்னெடுக்க முடியும்.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர், தமது கடமைகளுக்கு செல்லும் போது விசேட அனுமதிப் பத்திரம் எதுவும் விநியோகிக்கப்படாதென இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தமது பணிகளுக்கு செல்வதற்கான அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சோதனை சாவடிகளில் காண்பித்து, பணிக்கு செல்ல முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு மாத்திரம் பொருந்துமென இராணுவ தளபதி கூறுகின்றார்.


