இலங்கையில் 195 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்த 195 பேரின் மரண எண்ணிக்கை பதிவாகியுள்ள நிலையில் , கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,985 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே இன்று வெள்ளிக்கிழமை இதுவரையில் 3,839 பேர் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
Advertisement
இலங்கையில் இதுவரை 381,812 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 320,810 பேர் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளனர்.
இதேவேளை 44,041 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


