கிணற்றில் குதித்து கர்ப்பிணி பெண் தற்கொலை

வவுனியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

எனினும், குறித்த கர்ப்பிணி பெண் மரணமடைந்துள்ளதுடன், பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா- மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவர் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதனை அவதானித்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் குறித்த பெண்ணை கிணற்றில் இருந்து மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த கர்ப்பிணிப் பெண் மரணமடைந்தார்.

மேலும், மரணமடைந்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, அவருடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply