
இலங்கையில் கொரோனா பரவல் நிலை தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று(20) இரவு 10 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறுவோரைக் கைது செய்ய விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த விசேட நடவடிக்கையானது நேற்றிரவு முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இதற்காக தனி பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
நாட்டை மூடுவதற்கு அரசாங்கம் எடுத்த முடிவின்படி இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக,நாடளாவிய ரீதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

