நாட்டை தொடர்ந்தும் முடக்க நேரிட்டால் பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும் – ஜனாதிபதி கோட்டா

எதிர்வரும் காலத்தில் நாட்டை தொடர்ந்தும் முடக்க நேரிட்டால் பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு நேற்று (200 ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்டோரில் 98 சதவீதமானோருக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் அவர்களில் 43 சதவீதமானோருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதிக்குள் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தி முடிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலத்தில் நாட்டை தொடர்ந்தும் முடக்க நேரிட்டால் பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும்.

நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அனைவரும் மிக அவதானமாகவும், பொறுப்புடனும் செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply