யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் அதிகளவான மதுபான போத்தல்களை வாகனத்தில் ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் அளவுக்கு அதிகமான கால் போத்தல் மதுபானத்தை வாகனத்தில் ஏற்றிச் சென்றவேளை நெல்லியடி பொலிஸ் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் நேற்றைய தினம் (20) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுப் பிரியர்களுக்கு அதிக விலையில் விற்பனை செய்வதற்காக பலர் மதுபானப் போத்தல்களை பதுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


