மன்னாரில் 20 நாட்களில் 356 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

மன்னாரில் 20 நாட்களில் 356 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் தெரிவித்துள்ளது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள், இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும்  கூறப்பட்டுள்ளதாவது, ‘மன்னாரில் நேற்று மாலை, மேலும் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதாவது மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக  சென்றபோது மேற்கொள்ள பீ.சி.ஆர்.பரிசோதனைகளில் 16 தொற்றாளர்களும் சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜன் பரிசோதனைகளில் 13 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் இந்த மாதம்  முதலாம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை 356 பேர், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், மன்னார் மாவட்டத்தில் இதுவரை 1397 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதுவரை 13 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply