27 நாடுகளின் அரச மற்றும் தனியார் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும், சுற்றுலாத்துறை முக்கியஸ்தர்களுடன் கடந்த நாட்களில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொரோனா பரவலின் பின்னர், நிலையான சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவது தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தி, பொதுமக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இலங்கை செயற்படுவதாகவும், சுற்றுலாத்துறை மறுமலர்ச்சி இதில் பிரதான பங்கை வகிக்கும் என்றும் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தெரிவித்துள்ளார்.


