இந்தியாவில் புதிதாக 34 ஆயிரத்து 457 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இந்தியாவில் புதிதாக 34 ஆயிரத்து 457 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சு இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,  இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 34 ஆயிரத்து 457 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் புதிதாக 375 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4ஆயிரத்து 33ஆயிரத்து 964 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் 3 இலட்சத்து 61 ஆயிரத்து 340 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply