முற்றாக முடங்கியது மன்னார்

நாடளாவிய ரீதியில் நேற்று (20) இரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையிலான 10 நாட்கள் நாடு முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மன்னார் மாவட்டமும் முழுமையாக முடங்கியுள்ளது.

இன்றைய தினம் (21) சனிக்கிழமை மன்னார் மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை தவிர ஏனைய நடவடிக்கைகள் முடங்கியுள்ளது.

அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

எனினும் நடமாடும் அத்தியாவசிய சேவைகள் இடம்பெற்று வருகின்றது.

மீனவர்கள் கடற்தொழிலுக்கு சென்று வருகின்றனர்.

மேலும் மருந்தகம், வைத்தியசாலை, எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் செயற்பாடுகள் வழமையான போல் இடம்பெற்று வருகின்றன.

வீதிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply