கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொழும்பில் கரையொதுங்கிய சடலம்

ஊரடங்கு அமுலாகியுள்ள நிலையில் கொழும்பு – 15, மட்டக்குளி பகுதியிலுள்ள காக்கைத்தீவு கடற்கரையில் இன்றைய தினம் (21) நபரொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

முகம் துணியொன்றினால் மறைத்து கட்டப்பட்டும், கை மற்றும் கால்கள் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையிலும் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலமே இவ்வாறு ஒதுங்கியுள்ளதாக தெரியவருகிறது.

நீல நிற டெனிம் காற்சட்டை மற்றும் வெள்ளை நிற ரீ சேர்ட் அணிந்த நிலையில் குறித்த சடலம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சடலத்தை அடையாளம் காணும் நோக்கில் மட்டக்குளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply