அடுத்த இரு வாரங்கள் முக்கியமானவை: பொது சுகாதார பரிசோதகர் சங்கம்

நாடு முழுவதும் தற்போது நடைமுறையிலுள்ள தனிமைப் படுத்தல் ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைப்பிடித்தால் அடுத்த இரு வாரங்களில் கொரோனா நோய்த் தொற்றுகள் மற்றும் இறப்புகள் கணிசமாகக் குறைக்க முடியும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமூகத்தின் மத்தியில் வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் கடந்த வாரம் முழுதும் பதிவான தொற்றாளர்கள் மற்றும் இறப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயிர்களுக்கும் நாட்டுக்கும் மீள முடியாத பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் 10 நாட்களுக்குப் பிறகும் கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

ஊரடங்கு உத்தரவு விதித்ததன் பலனைப் பெறுவதற்காக பொதுமக்கள் வீட்டிலேயே இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

அத்தியாவசிய சேவை வழங்குனர்கள், அதிகாரிகள் வழங்கிய அனுமதியை தவறாக பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply