எகொடபிட்டிய பெரியவில்லு பகுதியில், யானையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு! SamugamMedia

புத்தளம், கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட எகொடபிட்டிய பெரியவில்லு பகுதியில் காட்டு யானையொன்று உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த காட்டு யானை சேற்றினுல் புதையுண்டு உயிரிழந்திருக்கலாமென வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சந்தேகிப்பதாகத் தெரிவித்தனர்.

உயிரிழந்த காட்டு யானை சுமார் 35 வயதுயென மதிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த யானைக்கு நிகாவரெட்டிய மிருக வைத்தியர் டொக்டர் இசுரு என்பவரினால் உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட உள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

Leave a Reply