வவுனியாவில் சீனியுடன் ரவை கலந்து விற்பனை என குற்றச்சாட்டு

வவுனியாவில் சீனியானது ரவை கலந்து விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாடு முடக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மக்கள் வர்த்தக நிலையங்களில் குவிந்து பொருட்களை கொள்வனவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் சீனியின் விலை அதிகரித்துள்ளதால் சில வர்த்தக நிலையங்களில் சீனியில் ரவையைக் கலந்து விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

Advertisement

குறித்த விடயம் தொடர்பாக வவுனியா நுகர்வோர் அதிகார சபையிடம் சில நுகர்வோர் முறைப்பாடுகளை தெரிவிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery

Leave a Reply