சாவகச்சேரியில் 13 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் 64 பேருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று (21) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளின் போதே மேற்படி 13 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் சுகாதாரப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a Reply