வவுனியா வைத்தியசாலைக்கு உயிர்காப்பு உபகரணங்கள் கையளிப்பு

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்சங்கத்தின் பிரித்தானிய கிளையினரால் வவுனியா வைத்தியசாலைக்கு உயிர்காப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த உபகரணங்கள் வவுனியா தமிழ்மத்தியமகா வித்தியாலயத்தின் பழையமாணவர் சங்கத்தினதும் (தாய்சங்கம்), வவுனியா மாவட்டமருத்துவ பிரிவினரது வேண்டுகோளுக்கிணங்க, பிரித்தானிய கிளையினரால் அன்பளிப்பு செய்யப்பட்டு இன்று(21) வழங்கி வைக்கப்பட்டது.

சுமார் 11இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டதுடன், அவை வவுனியா பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளரிடம் இன்று கையளிக்கப்பட்டது.

நிகழ்வில் தமிழ்மத்திய மகாவித்தியாலத்தின் அதிபர் மற்றும் பழையமாணவர் சங்கபிரதிநிதிகள், பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave a Reply