இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில், ராமேஸ்வரம் மீனவர்கள் உயிர் பிழைத்த அச்சத்துடன் கரை திரும்பியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவது,
இலங்கை கடற்படை ரோந்து கப்பல் ஒன்று ராமேஸ்வர மீனவர்களின் மீன்பிடி படகு மீது மோதியுள்ளது.
இதில் ராமேஸ்வர மீனவர்களின் படகு கடுமையாக சேதமடைந்துள்ளது.
எனினும், உயிருக்கு பயந்து மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.
இதேவேளை, அண்மையிலும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்லால் அடித்து விரட்டிய கொடூர சம்பவமும் குறிப்பிடத்தக்கது.


