இலங்கையில் மேலும் ஆயிரத்து 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 385 ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று சனிக்கிழமை 2 ஆயிரத்து 785 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையிலேயே மேற்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றுமட்டும் 3,884 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,580 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர்.
அதன்படி, 323,390 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு, 55,321 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மேலும் நேற்றைய தினம்195 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 6,985 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


