தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை தடுத்து வைப்பதற்கு இடைக்காலத் தடை!SamugamMedia

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை தடுத்து வைப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து, நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்க மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply