நாட்டில் நேற்று(20) கொரோனா வைரஸ் தொற்றால் 198 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (21) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 81 பெண்களும் 117 ஆண்களும் உள்ளடங்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு நாளில் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 7,183 ஆக அதிகரித்துள்ளது.


