மொட்டு கட்சியிலிருந்து ஜி.எல்.பீரிஸ் நீக்கம்! வெளியான அதிரடி அறிவிப்பு SamugamMedia

நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸை தமது கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.

நிறைவேற்றுக்குழு கடந்த வாரம் கூடியபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டது என மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, புதிய தவிசாளர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன எனவும், அவர்களில் ஒருவர் விரைவில் தெரிவுசெய்யப்படுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *