இது தேர்தல் காலம் அல்ல- வஜிர அதிரடிக் கருத்து! SamugamMedia

“நாட்டின் நிலைமையைத் தெரிந்துகொண்டும் தேர்தல் வேண்டும் என்று சிலர் பிடிவாதமாகச் செயற்படுகின்றனர். இது தேர்தல் காலம் அல்ல. அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக்கட்டியெழுப்பும் நேரமே இது.”



– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தற்போது தேர்தலை நடத்தக் கூடிய நிலைமை இல்லை என்று தெரிந்தும் கூட சிலர் தேர்தல் வேண்டும் என்று அடம்பிடிக்கின்றனர்.

இப்போது தேர்தல் நடக்காது என்ற துணிவில்தான் அவர்கள் இவ்வாறு பிடிவாதமாகச் செயற்படுகின்றனர்.

முதலில் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவோம். அதன்பின்னர் தேர்தலை நடத்துவோம்” – என்றார்.

Leave a Reply