யாழ். மாவட்டத்தில் அதிகரித்து செல்லும் கொரோனா தொற்றாளர்கள்..!

யாழ்ப்பாண மாவட்டத்தில் 80 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 153 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 413 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 24 பேர், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர், மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 10 பேர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் 05 பேர், அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 02 பேர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 04 பேர், நொதேர்ன் சென்ரல் வைத்தியசாலையில் ஒருவர் என யாழ்.மாவட்டத்தில் 80 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் 17 பேர், பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர் என கிளிநொச்சி மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 12 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 02 பேர், பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர் என வவுனியா மாவட்டத்தில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் 04 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர், மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர் என முல்லைத்தீவு மாவட்டத்தில் 09 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், வவுனியா விமானப்படை முகாமில் 03 பேர், முழங்காவில் கடற்படை முகாமில் 02 பேர், முல்லைத்தீவு விமானப்படை முகாமில் ஒருவரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *