எரிவாயு தொடர்பில் மகிழ்ச்சி செய்தியை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர்..!

தற்போதைய பயணத்டை காலத்தில் எந்த எரிவாயு தட்டுப்பாட்டுக்கும் அனுமதிக்கப்படாது என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அண்மையில் ஏற்பட்டுள்ள எரிவாயு பற்றாக்குறையை அடுத்து நாட்டில் உள்ள எரிவாயு இருப்பு குறித்து விசாரிக்க கேரளவாபிட்டிய லிட்ரோ எரிவாயு முனையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அத்தோடு உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும், மக்களுக்கு சுமை ஏதுமின்றி நிவாரணம் வழங்கி லிட்ரோ எரிவாயுவை முந்தைய விலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் போதுமான அளவு எரிவாயு கையிருப்பு கிடைப்பதால், அது சந்தைக்கு அதிகபட்ச திறனில் எரிவாயுவை வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply