இலங்கையின் எரிபொருள் இருப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்திருந்த தொழிற்சங்க உறுப்பினர் ஆனந்த பாலித்த கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.
எனினும் தற்போதுள்ள எரிபொருள் 11 நாட்களுக்கே போதுமானது என நேற்றைய தினம் அவர் நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
அத்துடன் எரிசக்கதி அமைச்சரின் உத்தியோகபூர்வ வீட்டின் சீரமைப்புக்கு ஏற்படும் செலவு தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
மேலும் கைது செய்யப்பட்டவரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.