
ஒளடதங்களின் விலைகள் 9 சதவீதத்தினால் அதிகரிப்பதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சரினால், ஒளடதங்களுக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமையால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபை சட்டத்திற்கு அமைய பல ஒளடதங்களுக்கும், வைத்திய உபகரணங்களுக்கும் உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் நேற்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கு அமைய 60 வகையான மருந்துகள் மற்றும் நான்கு வகையான வைத்திய உபகரணங்கள் என்பனவற்றுக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 60 ஒளடதங்களின் விலைகள் அதிகரிப்பதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக்க கன்கந்த தெரிவித்துள்ளார்.
டொலரின் பெறுமதி 198 ரூபாவாக இருந்த சந்தர்ப்பத்தில்தான் விலை அதிகரிப்புக்கான கோரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும், தற்போது டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக மேலும் 20வீத விலை அதிகரிப்பை கோரியுள்ளதாக இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக்க கன்கந்த தெரிவித்துள்ளார்.