நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தம்புள்ளை பொருளாதார மையத்திற்கு மரக்கறிகளை கொண்டு வந்தாலும், அவற்றை வாங்க வருபவர்களில் 90% பேர் வரை வருகைதராததால் மரக்கறிகள் தேங்கியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
ஊரடங்கு சட்டம் காரணமாக காய்கறிகளை வாங்க வரும் தொழில் முனைவோர் குறைவடைந்தமையால் காய்கறி அறுவடைகளை விற்க வருவதை குறைத்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
எனினும், தம்புள்ளை பொருளாதார மையத்திற்கு அதிக அளவில் காய்கறிகள் தேங்கியுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.