சமையல் எரிவாயுவிற்க்கு இனி தட்டுப்பாடு கிடையாது.

தற்போது லிட்ரோ கேஸ் நிறுவனம் தமது முந்தைய விலையில் எரிவாயு கொள்கலன்களை விநியோகித்து வரும் அதேவேளை, லாஃப்ஸ் நிறுவனம் கடந்த 20 ஆம் திகதி முதல் புதிய விலையில் சந்தைக்கு சமையல் எரிவாயுவை விநியோகிக்க ஆரம்பித்துள்ள நியைில் நாளை முதல் எந்தவொரு சமையல் எரிவாயுவையும் சந்தையில் தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு நேற்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் குறித்த நிறுவனங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எரிவாயு கொள்கலன்களை பார்வையிட்டதன் பின்னர், திங்கள் முதல் தட்டுப்பாடின்றி சந்தையில் எரிவாயுவை பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *