மத்தேகொட பகுதியிலுள்ள வீடு ஒன்றிலுள்ள சுமார் 50 நாய்களை காப்பாற்றுவதற்கு முன்வருமாறு மிருக சங்கமொன்று கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இந்த நாய்களை பராமரித்து வந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாய்கள் உணவின்றி இறக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஜஸ்டிஜ் ஃபோ எனிமல் என்ட் நேச்சர் அமைப்பின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த நாய்களுக்கு உணவு வழங்க, மிருக அமைப்புக்களின் அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சென்ற போதிலும், அதற்கு அங்குள்ள நபர் ஒருவரினால் தடை ஏற்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவிக்கின்றார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மத்தேகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.