சமையல் எரிவாயு தொடர்பில் வெளியான தகவல்

எந்தவொரு சமையல் எரிவாயுவையும் நாளை முதல் சந்தையில் தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு நேற்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டதன் பின்னர் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன  ஊடகங்களுக்கு இதனை கூறியுள்ளார்.

தற்போது லிட்ரோ கேஸ் நிறுவனம் தமது முந்தைய விலையில் எரிவாயு கொள்கலன்களை விநியோகித்து வரும் அதேவேளை, லாஃப்ஸ் நிறுவனம் கடந்த 20 ஆம் திகதி முதல் புதிய விலையில் சந்தைக்கு சமையல் எரிவாயுவை விநியோகிக்க ஆரம்பித்துள்ளது.

கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் குறித்த நிறுவனங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எரிவாயு கொள்கலன்களை பார்வையிட்டதன் பின்னர், திங்கள் முதல் தட்டுப்பாடின்றி சந்தையில் எரிவாயுவை பெற்றுக்கொள்ளமுடியும் என கூறியுள்ளார்.

Leave a Reply