
ஹம்பேகமுவ, மயிலவல பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொடவெஹரகம மற்றும் ஹம்பேகமுவ பகுதியை சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
வெலிஓய பகுதியை நோக்கிய பயணித்த முச்சக்கரவண்டி, நேற்று (21) மாலை சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் படுகாயமடைந்துள்ளார்.