
பனங்காடு வைத்தியசாலை வழமைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு நன்றிகள் – சந்திரசேகரம் ராஜன்

பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் உட்பட ஊழியர்கள் தாக்கப்பட்டிருந்ததால் வைத்தியாலையின் ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் பொதுமக்கள் வைத்திய சேவைகளை பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கி இருந்தனர்.
நிலைமையினை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்து வைத்தியசாலையை மீள வழமைக்கு திரும்ப வைத்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்ளவதாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்ததார்.
நேற்றைய தினம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் அவர்களை நானும் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் அவர்களும் நேரில் சென்று சந்தித்து பேசியிருந்தோம். வைத்திய சேவையை வழமைக்கு திரும்ப வைப்பதற்கான நடடிவடிக்கையில் தீவீரமாக ஈடுபட்டிருந்தார் அவருக்கு விசேட நன்றிகள் அத்துடன் வைத்தியர் ஹாரன்ராஜ் அவர்களுக்கும் பொதுமக்கள சார்பாக நன்றிகளை தெரிவிக்கின்றேன் என்றார்.